Posts

Showing posts from August, 2015

வானவில்

Image
ஜூன் மாதம். அன்று வரை காலை எட்டு மணியளவில் வெறிச்சோடி இருந்த சாலைகள் மீண்டும் களை கட்ட ஆரம்பித்தன. இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்தாகிவிட்டன. அப்பாவின் பைக்கில் ஜம்மென்று ஏறி அமர்ந்து, புத்தம் புது உற்சாகத்துடன் பள்ளிக்கூட வாசலில் வந்து இறங்கினான் கிருஷ்ணா.  "லஞ்ச் ஒழுங்கா சாப்பிடு. மார்க் ஷீட் குடுப்பாங்க..மறக்காம எடுத்துக்கிட்டு வா..ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா" என்று அவனது கன்னத்தில் ஆசையாக ஒரு முத்தம் வைத்து, அவன் உள்ளே நடந்து செல்லும்வரை காத்திருந்து பின் கிளம்பினான் கிருஷ்ணாவின் அப்பா வாசு.  நான்காம் வகுப்பு 'A' பிரிவு. பத்து வயது கிருஷ்ணாவிற்கு மனதுக்குள் ஒரே சந்தோஷம். பள்ளிக்கூடம் திறக்கும் அந்த முதல் நாள் அன்று புதிதாக பல மாணவர்கள் வகுப்பில் சேருவார்கள். இந்த முறை அவர்களில் யாராவது ஒருவரை நமது பெஸ்ட் ப்ரெண்ட்  ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்ளேயே கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். படி ஏறி தனது வகுப்பு எது என்று ஒவ்வொரு அறையாக கடந்து கடைசியில் வந்து சேர்ந்தான். Class 4-A என்று புதிய பலகை வகுப்பின் வாசலில் மாட்டப்பட...

ஜாமெட்ரி பாக்ஸ்

சென்னை கோட்டூர்புரத்தில்  உள்ள மாநகராட்சி பூங்கா. கவிதாவும் அவளது கணவன் ஸ்ரீகாந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாக்கிங் செய்வதற்காக அங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர்களை தினமும் அங்கே பார்க்க முடிந்தது. காரணம் கவிதா எட்டு மாத கர்ப்பிணி. டாக்டரின் அறிவுரைப்படி தினமும் ஒரு  மணி நேரம் வாக்கிங் செய்யவேண்டியிருந்தது. எப்பவும் போல அன்றும் வாக்கிங் முடித்துவிட்டு தங்கள் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். "ஸ்ரீ, நான் உங்ககிட்ட தினமும் கேட்டுகிட்டே இருக்கேன். ஆனா இன்னும் நீங்க அவங்ககிட்ட கேக்கறதுக்கு தயங்கிகிட்டே இருக்கீங்க.. ஒரு வாரம் ஆயிடுச்சு. கேக்க போறீங்களா இல்லையா?" அந்த பூங்காவை பராமரிக்கும் வாட்ச்மேன் மணிவண்ணன் அதனுள்ளேயே ஒரு சிறிய குடிசையில் குடியிருந்து வந்தார். உடன் அவரது மனைவி புஷ்பாவும், ஏழு வயது மகன் பாபுவும், பத்து நாட்களே நிரம்பியிருந்த ஒரு அழகான நாய்க்குட்டியும். நாய்குட்டிக்கு பாபு 'முன்னா' என்று பெயரிட்டிருந்தான். "இன்னிக்கு கண்டிப்பா கேட்டுடறேன் கவி..நீ போய் கார் ல உக்காரு..நான் இதோ வரேன்", என்று வ...