Posts

வானவில்

Image
ஜூன் மாதம். அன்று வரை காலை எட்டு மணியளவில் வெறிச்சோடி இருந்த சாலைகள் மீண்டும் களை கட்ட ஆரம்பித்தன. இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறந்தாகிவிட்டன. அப்பாவின் பைக்கில் ஜம்மென்று ஏறி அமர்ந்து, புத்தம் புது உற்சாகத்துடன் பள்ளிக்கூட வாசலில் வந்து இறங்கினான் கிருஷ்ணா.  "லஞ்ச் ஒழுங்கா சாப்பிடு. மார்க் ஷீட் குடுப்பாங்க..மறக்காம எடுத்துக்கிட்டு வா..ஆல் தி பெஸ்ட் கிருஷ்ணா" என்று அவனது கன்னத்தில் ஆசையாக ஒரு முத்தம் வைத்து, அவன் உள்ளே நடந்து செல்லும்வரை காத்திருந்து பின் கிளம்பினான் கிருஷ்ணாவின் அப்பா வாசு.  நான்காம் வகுப்பு 'A' பிரிவு. பத்து வயது கிருஷ்ணாவிற்கு மனதுக்குள் ஒரே சந்தோஷம். பள்ளிக்கூடம் திறக்கும் அந்த முதல் நாள் அன்று புதிதாக பல மாணவர்கள் வகுப்பில் சேருவார்கள். இந்த முறை அவர்களில் யாராவது ஒருவரை நமது பெஸ்ட் ப்ரெண்ட்  ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்ளேயே கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். படி ஏறி தனது வகுப்பு எது என்று ஒவ்வொரு அறையாக கடந்து கடைசியில் வந்து சேர்ந்தான். Class 4-A என்று புதிய பலகை வகுப்பின் வாசலில் மாட்டப்பட...

ஜாமெட்ரி பாக்ஸ்

சென்னை கோட்டூர்புரத்தில்  உள்ள மாநகராட்சி பூங்கா. கவிதாவும் அவளது கணவன் ஸ்ரீகாந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாக்கிங் செய்வதற்காக அங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர்களை தினமும் அங்கே பார்க்க முடிந்தது. காரணம் கவிதா எட்டு மாத கர்ப்பிணி. டாக்டரின் அறிவுரைப்படி தினமும் ஒரு  மணி நேரம் வாக்கிங் செய்யவேண்டியிருந்தது. எப்பவும் போல அன்றும் வாக்கிங் முடித்துவிட்டு தங்கள் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். "ஸ்ரீ, நான் உங்ககிட்ட தினமும் கேட்டுகிட்டே இருக்கேன். ஆனா இன்னும் நீங்க அவங்ககிட்ட கேக்கறதுக்கு தயங்கிகிட்டே இருக்கீங்க.. ஒரு வாரம் ஆயிடுச்சு. கேக்க போறீங்களா இல்லையா?" அந்த பூங்காவை பராமரிக்கும் வாட்ச்மேன் மணிவண்ணன் அதனுள்ளேயே ஒரு சிறிய குடிசையில் குடியிருந்து வந்தார். உடன் அவரது மனைவி புஷ்பாவும், ஏழு வயது மகன் பாபுவும், பத்து நாட்களே நிரம்பியிருந்த ஒரு அழகான நாய்க்குட்டியும். நாய்குட்டிக்கு பாபு 'முன்னா' என்று பெயரிட்டிருந்தான். "இன்னிக்கு கண்டிப்பா கேட்டுடறேன் கவி..நீ போய் கார் ல உக்காரு..நான் இதோ வரேன்", என்று வ...

இவரைப் போலவும் இருக்க முடியுமா?

Image
தினமும் காலை ஒன்பதரை மணியளவில் அவசர அவரசமாக பேருந்தில் ஏறி அலுவலகம் செல்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு எப்போதும் போல அதே அவசரத்தில் பேருந்தில் ஏறினேன். நமக்குள் எவ்வளவு பதட்டம் இருந்தாலும் , அதனால் பேருந்தின் வேகம் அதிகம் ஆகப்போவதில்லை என்பது மூளைக்கு தெரிந்தாலும் மனதுக்கு புரியாதே. பதட்டம் குறையவே இல்லை. இன்னிக்கும் லேட் தான் என்ற டென்ஷனோடு  காலியான இருக்கை இருக்கிறதா என்று கண்கள் தேடின. பெண்கள் இருக்கை ஒன்று காலியானதை கண்டதும் பால் கிண்ணத்தை கண்ட பூனையைப் போல கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து போய் அமர்ந்தேன். "ஹப்பாடா.. அடுத்த அரை மணி நேரத்திற்கு காலையில் மிஸ் பண்ண தூக்கத்தை catch up பண்ணிக்கலாம்" என்ற நிம்மதி. ஆனால் அது நடக்கவில்லை. அதை விட விலைமதிப்பற்ற அனுபவம் கிடைத்தது. அதற்கு காரணமாக இருந்த அந்த பெண்மணியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.  எனது இருக்கையின் அருகே நின்றுக்கொண்டிருந்தார் அந்த பெண். அவரது பெயரை கடைசி வரை நான் கேட்கவே இல்லை.  அவருக்கு சுமார் 55 வயது இருக்கும். ஒரு சாதாரணமான கிராமத்து பெண்மணி. அவரது பேச...

நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 9

#நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 9  நேற்றைய (நாள் - 8) மகிழ்ச்சி அலையைப்  பற்றி விரிவான ஒரு பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது . அதற்கு முன் நாள்-9 அன்று எதில் மகிழ்ச்சி கிடைத்தது என்று பதிய முற்படுகிறேன். இன்று முழுவதும் அம்மா வீட்டில் டென்ட் அடிச்சாச்சு. ஹையா ஜாலி, அம்மா சாப்பாடு அப்படின்னு தம்பட்டம் அடிச்சா, உடனே  வெஜிடரியன் ல என்ன பெரிய ஸ்பெஷல் இருக்கு? அப்படின்னு கேள்வி வருது. ஆனா இருக்கே. அதுவும் அம்மா கையால சமைச்சதுன்னா வேற  level taste இல்லையா? முருங்கைக்காய், சின்ன வெங்காயம் வத்தக்கொழம்பு, சேப்பங்கிழங்கு பொரியல், புடலங்காய் பொரியல், ரசம், கீரை மசியல் என்று வழக்கம் போல அசத்திட்டாங்க. அதோடு சேர்ந்து "இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ. உப்பு சரியாய் இருக்கா? ரொம்ப காரம் இல்லையே? புடிச்சிருக்கு இல்ல?" என்று சாப்பிட்டு முடிப்பதற்குள் கிடைக்கும் அன்பிற்கு தனி சுவை. அவர் செய்வதை எல்லாம் பார்க்கும்போது என் மகளை  நானும் இப்படியெல்லாம் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஒரு விதத்தில் டீனேஜ் வயதில் அம்மாவை பல வகையில் வெறு...

‪#‎நூறுநாள்மகிழ்ச்சி‬ தருணங்கள் நாள்-7

‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  தருணங்கள் நாள்-7: இன்று காலையில் முகநூலை திறந்து பார்த்தவுடன் நான் படித்த முதல் மெஸேஜ் என் பள்ளித்தோழியிடமிருந்து வந்திருந்தது. பார்த்தும் பேசியும் பல வருடங்கள் ஆகியிருந்த தோழிகளிடமிருந்து திடீரென மெஸேஜஸ் வரும்பொழுது ஒரு அலாதியான சந்தோஷம் தோன்றும் அல்லவா? அப்படி இருந்தது இன்று காலையில். அவளுக்கு இந்த நூறுநாள் மகிழ்ச்சி பயிற்சி பிடித்திருப்பதாகவும், அவளும் இதை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் எழுதி இருந்தாள்.  ‪#‎ மகிழ்ச்சி‬ அவளது message-ஐ படிக்கும்பொ ழுது எங்களது பள்ளி நாட்களின் இனிமையான நினைவுகள் மனதை வருடிச் சென்றன. அத்தனையும் கடந்து இப்பொழுது வாழ்க்கையில் எங்கு இருக்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பது வேறொரு தனி அனுபவம் தான். இந்த மகிழ்ச்சி அலை ஓயாமல் பாய்ந்து பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் நாளையும் தொடர்வோம், வேறொரு அனுபவத்தை நோக்கி!

‪#‎நூறுநாள்மகிழ்ச்சி‬ நாள் 6

Image
‪#‎ நூறுநாள்மகிழ்ச்சி‬  நாள் 6: எனது உயிர் தோழி  Ganga Bharani  எழுதி வெளியாகி உள்ள இரண்டு புத்தகங்களையும் ஆர்டர் செய்திருந்தேன். இன்று வந்து சேர்ந்தன. எனக்கு வாழ்க்கையில் தெளிவும்,நம்பிக்கையும் ஏராளமாக தேவைப்பட்ட போது எனக்கு தோள் கொடுத்த தோழி.  என்னை blog எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய தோழியும் இவளே. இந்த தோழியின் எழுத்து முயற்சிக்கு எப்போதும் துணை நின்று ஊக்கம் அளிக்க ஆசை. அவளது கனவுகளை புத்தகங்களாகவும்,பாராட்டுகளாகவும் காணும்போது மிக்க  ‪#‎ மகிழ்ச்சி‬ . ‪#‎ வாழ்க்கையின்அர்த்தங்கள்‬   ‪#‎ உண்மையானநட்பு‬   ‪#‎ AMinuteToDeath‬

நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 5

என்ன டா இன்னிக்கு மகிழ்ச்சி பதிவு எதுவும் வரலையே னு யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களா? இதோ, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 5: இன்று மகிழ்ச்சியை உருவாக்க நானாக மெனக்கெடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்பொழுது இன்று நான் மகிழ்ச்சியாக இல்லயா? என்று யோசித்து பார்த்த போது  என்னுள் நான் காணும் மாற்றங்களை உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சி பயிற்சியை  தொடங்கிய இந்த சில நாட்களிலேயே என்னுள் பொறுமையும் புரிதலும்  அதிகரித்திருப்பதை உணர்கிறேன். சாதாரணமாக சிறிய விஷயங்களுக்கெல்லாம் முகத்தை சுழிக்கும் சுபாவம் என்னிடம் அதிகம். ஆனால் கடந்த சில நாட்களாக அதை தவிர்க்க முயல்கிறேன். இதன் மூலம் நானும் என்னை சுற்றி இருப்பவர்களும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது. இதனால் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.  இந்த பயிற்சியின் பலன் உள்ளே ஊற ஆரம்பித்திருப்பதாக தோன்றுகிறது. உங்களுக்கும் இது நடக்கிறதா என்று முயன்று பாருங்களேன். இன்றைய பதிவு விரைவில்.