இவரைப் போலவும் இருக்க முடியுமா?
தினமும் காலை ஒன்பதரை மணியளவில் அவசர அவரசமாக பேருந்தில் ஏறி அலுவலகம் செல்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு எப்போதும் போல அதே அவசரத்தில் பேருந்தில் ஏறினேன். நமக்குள் எவ்வளவு பதட்டம் இருந்தாலும் , அதனால் பேருந்தின் வேகம் அதிகம் ஆகப்போவதில்லை என்பது மூளைக்கு தெரிந்தாலும் மனதுக்கு புரியாதே. பதட்டம் குறையவே இல்லை. இன்னிக்கும் லேட் தான் என்ற டென்ஷனோடு காலியான இருக்கை இருக்கிறதா என்று கண்கள் தேடின. பெண்கள் இருக்கை ஒன்று காலியானதை கண்டதும் பால் கிண்ணத்தை கண்ட பூனையைப் போல கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து போய் அமர்ந்தேன். "ஹப்பாடா.. அடுத்த அரை மணி நேரத்திற்கு காலையில் மிஸ் பண்ண தூக்கத்தை catch up பண்ணிக்கலாம்" என்ற நிம்மதி. ஆனால் அது நடக்கவில்லை. அதை விட விலைமதிப்பற்ற அனுபவம் கிடைத்தது. அதற்கு காரணமாக இருந்த அந்த பெண்மணியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. எனது இருக்கையின் அருகே நின்றுக்கொண்டிருந்தார் அந்த பெண். அவரது பெயரை கடைசி வரை நான் கேட்கவே இல்லை. அவருக்கு சுமார் 55 வயது இருக்கும். ஒரு சாதாரணமான கிராமத்து பெண்மணி. அவரது பேச...