நூறு நாள் மகிழ்ச்சி சவால் நாள்:2 (July 23,2015)
#நூறுநாள்மகிழ்ச்சி சவால் நாள்-2
நேற்று நீங்கள் பலரும் அளித்த ஊக்குவிப்பின் எதிரொலியாக இன்றும் தொடர்கிறேன். காலையில் ஒரு சிந்தனை. இந்த சவாலின் மூலம் நான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா? இன்று வேறு ஒருவர் முகத்திலும் புன்னகையை மலர செய்வோம் என்ற எண்ணத்துடன் கையில் சில ரோஜாப்பூக்களை எடுத்து கொண்டு புறப்பட்டேன்.
எங்கள் last minute மளிகை பொருள் தேவைகளுக்கு நாங்கள் எப்போதும் நாடுவது தெருமுனையில் உள்ள அண்ணாச்சி கடை. அண்ணாச்சியின் மனைவி கடையை கவனித்துக் கொண்டு எப்போதும் அங்கேயே இருப்பவர். அவரிடம் சென்று, "நீங்க ரோஜாப்பூ வெச்சுப்பீங்களா அக்கா? என் கிட்ட இருக்கற ரோஜாப்பூவ யாருக்காவது குடுக்கணும்-னு தோணிச்சு. சரி, உங்களோட தினசரி உழைப்ப பாராட்டி உங்களுக்கு குடுக்கலாம் னு எடுத்துட்டு வந்தேன்." அவங்களும் சிரிச்சுகிட்டே வாங்கிக்கிட்டாங்க. மகிழ்ச்சியாக இருந்தது. smile emoticon
இன்று நீங்கள் யாரை மகிழ்வித்து மகிழ போகிறீர்கள்?
Comments
Post a Comment