நூறு நாள் மகிழ்ச்சி சவால் நாள்:1 (July 22,2015)

சமீபத்தில் எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இந்த வரிகளை கண்டேன் - "மகிழ்ச்சியான அப்பா நான்". இந்த வரிகள் என்னுள் சிந்தனை அலைகளை தூண்டிவிட்டன. "மகிழ்ச்சியான பெண்மணி நான்" என்று என்னால் உறுதியாக ஒவ்வொரு நாளும் சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
சரி, அந்த மகிழ்ச்சியை நாமே ஒவ்வொரு நாளும் உருவாக்கி கொண்டால் என்ன என்றும் தோன்றியது. எனவே‪#‎நூறுநாள்மகிழ்ச்சி‬ என்ற சவாலை எனக்கு நானே விடுத்துள்ளேன். செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்!
நீங்களும் என்னோடு சவாலை ஏற்றுக்கொண்டு பயணிக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்? தினமும் ஏதாவது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயத்தை உங்கள் பக்கத்தில் பதிய வேண்டும்.
#நூறுநாள்மகிழ்ச்சி நாள்:1
இன்று சாலையில் நான் சந்தித்த இந்த பாட்டிக்கு, அவரால் எடுத்து செல்ல கனமாக இருந்த பையை தூக்கி சென்று உதவி செய்ததில் மகிழ்ச்சி.



இப்படிக்கு,
உங்கள் ஹரி

Comments

Popular posts from this blog

13 self-written quotes that help me #BeAlive

When does she stop dreaming?

What can I (and we) do before another Nirbhaya or Swathi?