#நூறுநாள்மகிழ்ச்சி தருணங்கள் நாள்-7
#நூறுநாள்மகிழ்ச்சி தருணங்கள் நாள்-7:
இன்று காலையில் முகநூலை திறந்து பார்த்தவுடன் நான் படித்த முதல் மெஸேஜ் என் பள்ளித்தோழியிடமிருந்து வந்திருந்தது. பார்த்தும் பேசியும் பல வருடங்கள் ஆகியிருந்த தோழிகளிடமிருந்து திடீரென மெஸேஜஸ் வரும்பொழுது ஒரு அலாதியான சந்தோஷம் தோன்றும் அல்லவா? அப்படி இருந்தது இன்று காலையில். அவளுக்கு இந்த நூறுநாள் மகிழ்ச்சி பயிற்சி பிடித்திருப்பதாகவும், அவளும் இதை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் எழுதி இருந்தாள். #மகிழ்ச்சி
அவளது message-ஐ படிக்கும்பொழுது எங்களது பள்ளி நாட்களின் இனிமையான நினைவுகள் மனதை வருடிச் சென்றன. அத்தனையும் கடந்து இப்பொழுது வாழ்க்கையில் எங்கு இருக்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பது வேறொரு தனி அனுபவம் தான்.
இந்த மகிழ்ச்சி அலை ஓயாமல் பாய்ந்து பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் நாளையும் தொடர்வோம், வேறொரு அனுபவத்தை நோக்கி!
Comments
Post a Comment