நூறு நாள் மகிழ்ச்சி சவால் நாள்:3 (July 24,2015)
#நூறுநாள்மகிழ்ச்சி நாள்:3
நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத வரமாக இருக்கும் ஒரு தொழிலாளிக்கு இன்று நன்றி சொல்லி மகிழலாம் என்று முடிவெடுத்தேன்.
நான் சமீப காலமாக அடிக்கடி பயன்படுத்துவது ஆட்டோ சேவையை தான். இன்று ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி சொன்னால் என்ன? வீட்டில் எப்பொழுதோ வாங்கி வைத்திருந்த கிரீட்டிங் கார்ட் (greeting card) ஒன்றை எடுத்து (புகைப்படத்தில் காணலாம்) ஒரு வாழ்த்து செய்தியை எழுதினேன். அது வெறும் நன்றியாக மட்டுமில்லாமல் அவரை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதால் இந்த வரிகளை எழுதினேன்.
ஓலா ஆட்டோவில் திரு.மொஹம்மது அலீ-யின் (55-60 வயது) ஆட்டோவில் பயணம் தொடங்கியது. பயணத்தின் போது அவரிடம் பல விஷயங்கள் casual-ஆக பேசிக்கொண்டே வந்தேன். இறங்கும்பொழுது இந்த வாழ்த்து அட்டையை அவரிடம் கொடுத்து, கொடுப்பதற்கான காரணத்தையும் சொன்னேன். சென்னை மக்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: "எங்கள நம்பி ஆட்டோ-ல நெறய பேர் ஏறுறாங்க. எங்களுக்கு வழி தெரியும்னு சொல்லியும் சிலர் எங்கள நம்பாம, வழி முழுக்க மத்தவங்க கிட்ட வழி கேட்டுக்கிட்டே வறாங்க. அது சில நேரத்துல வருத்தமா இருக்கு. கொஞ்சம் எங்களையும் நம்புங்களேன். "
"எங்க நன்றியை நீங்க உங்க ஆட்டோ நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்குங்க,நான் நீங்க சொன்னத என் நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு, மீட்டர் கட்டணத்தை செலுத்திவிட்டு விடைபெற்றேன்.
இப்படிக்கு
உங்கள் ஹரி
Comments
Post a Comment