நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 9

#நூறுநாள்மகிழ்ச்சி நாள் - 9

 நேற்றைய (நாள் - 8) மகிழ்ச்சி அலையைப்  பற்றி விரிவான ஒரு பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது . அதற்கு முன் நாள்-9 அன்று எதில் மகிழ்ச்சி கிடைத்தது என்று பதிய முற்படுகிறேன்.

இன்று முழுவதும் அம்மா வீட்டில் டென்ட் அடிச்சாச்சு. ஹையா ஜாலி, அம்மா சாப்பாடு அப்படின்னு தம்பட்டம் அடிச்சா, உடனே  வெஜிடரியன் ல என்ன பெரிய ஸ்பெஷல் இருக்கு? அப்படின்னு கேள்வி வருது. ஆனா இருக்கே. அதுவும் அம்மா கையால சமைச்சதுன்னா வேற  level taste இல்லையா? முருங்கைக்காய், சின்ன வெங்காயம் வத்தக்கொழம்பு, சேப்பங்கிழங்கு பொரியல், புடலங்காய் பொரியல், ரசம், கீரை மசியல் என்று வழக்கம் போல அசத்திட்டாங்க.

அதோடு சேர்ந்து "இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ. உப்பு சரியாய் இருக்கா? ரொம்ப காரம் இல்லையே? புடிச்சிருக்கு இல்ல?" என்று சாப்பிட்டு முடிப்பதற்குள் கிடைக்கும் அன்பிற்கு தனி சுவை. அவர் செய்வதை எல்லாம் பார்க்கும்போது என் மகளை  நானும் இப்படியெல்லாம் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஒரு விதத்தில் டீனேஜ் வயதில் அம்மாவை பல வகையில் வெறுத்து, எரிந்து விழுந்து, காயப்படுத்தி இருந்தாலும், அதையெல்லாம் மறந்து அதிகமான அன்பைப்  பொழியும் மனது அம்மாவைத்  தவிர வேற யாருக்கு வரும்?

அந்த மனது எனக்கும் வேண்டும் என்ற ஆசையுடன் இன்றைய பதிவு முடிகிறது.

#அம்மா #அன்பு #மகிழ்ச்சி

Comments

Popular posts from this blog

13 self-written quotes that help me #BeAlive

Kulfi's Day Out

Why your break-up is a sign of courage